சிறு ஏற்றுமதி பயிர் மிளகுக்கு கூடுதல் கேள்வி

(UDHAYAM, COLOMBO) – மிளகு செய்கையின் மூலம் கூடுதலான அறுவடையை பெறுவதற்கான செயற்றிட்டம் ஒன்றை ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. மிளகு செய்கையின் மூலம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய சிறு ஏற்றுமதி பயிரான மிளகுக்கு கூடுதல் கேள்வி இருப்பதால் இந்த திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

இறப்பருக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சந்தையில் உள்ளுர் இயற்கை இறப்பரின் விலைகள் அதிகரித்துள்ளன என்று இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், தற்சமயம் உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ ஷீட் இறப்பர் 310 ரூபாவிலிருந்து 320 ரூபா வரை விற்பனையாகிறது. இந்த விலை ஒப்பீட்டளவில் உயர்ந்த விலையாக கருதப்படுகிறது. இதனால், உள்ளுர் இறப்பர் செய்கையாளர்கள் இலாப நோக்குடன் தமது செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும். உள்ளுர் இறப்பரின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்…

Read More

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சுகாதாரப் பிரிவினர்

(UDHAYAM, COLOMBO) – வெசாக் தினத்திற்கு அமைவாக தான நிகழ்வுகள், பந்தல்கள், தோரணங்கள் என்பனவற்றை ஒழுங்கு செய்யும் போது பொதுமக்களின் பாதுகாப்பு பற்றியும், உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர், பொதுச் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார வலியுறுத்தியுள்ளார். சகல தான நிகழ்வுகளையும் பதிவு செய்வது அவசியமாகும். சுத்தமான நீரை போதுமான…

Read More