வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபது காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 12 பேர் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்துள்ளார். இதில் 7 பேரின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 22 பேர் புதிதாக தங்களது காணி…

Read More

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற விவதம் நடத்துவதற்குறிய திகதியை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை​…

Read More

ஜனாதிபதியின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV|COLOMBO)-விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….

Read More

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன் போது ஆரயப்படவுள்ளதாக, அரசாங்க தரப்பின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதுபோல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன…

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இந்த மீளாய்வுக் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி…

Read More

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் கருத்துக்களை முன்வைப்பதற்காக, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழு சுதந்திர கட்சியின் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு செய்து, இறுதி அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Read More