இலங்கை – இந்தோனேஷியா மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும இடையில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் அபிவிருத்தி, கல்வித்துறையின் மேம்பாடு போன்றவற்றில் இலங்கைக்கு உதவும் வகையில், உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தோனேஷிய ஜனாதிபதி நேற்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.   இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதானமாக மூன்று விடயங்கள்…

Read More

சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.   இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சிங்கப்பூர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த உடன்படிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்விக்கிரமசிங்க…

Read More

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. நேற்று இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூன் இதன்போது பங்கேற்கவுள்ளார். சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு கடந்த வாரத்தில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. இருநாடுகளுக்கிடையில் , பொருட்கள் சேவைகள் பரிமாற்றம் , சுதந்திர வர்த்தம் மற்றும் முதலீட்டு செயற்பாடுகள் போன்று பொது கொள்முதல் செயற்பாடுகள் குறித்த இருதரப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் – இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள்…

Read More

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷுக்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையில் வர்த்தக, பொருளாதார மற்றும் பலதுறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு மற்றுமொரு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read More