தேசிய அணியைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு போஷாக்குக் கொடுப்பனவு

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய விளையாட்டு சம்மேளனத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய பயிற்சி குழுக்களில் அங்கம் வகிக்கும் வீர வீராங்கனைகளுக்கு போஷாக்கு கொடுப்பனவு பழங்கப்படவுள்ளது   இதுதொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 அளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன்-வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.   எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 விளையாட்டுக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பயிற்சிக் குழுக்களில் 150 வீர வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இந்த நிகழ்வின்…

Read More

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல்.. ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.

(UTV|COLOMBO)-கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் பத்துலட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில் துறையை ஊக்குவித்தலும் பொதியிடல் துறை விருத்தி செய்தலும் என்ற கருப்பொருளிலான அதிகாரசபையின் திட்ட்த்துக்கு இணங்க அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூட்த்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். கைத்தொழில்…

Read More

மீதொட்டமுல்ல அனர்த்தம் – நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் நிர்மூலமான வீடுகளின் முழுமையான பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுமென பிரதமர் கூறினார். மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார். இந்தச் சந்திப்பு நேற்று  அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தமது துயர்களை பிரதமரிடம் பகிரங்கமாக எடுத்துரைக்க வாய்ப்பு கிடைத்தது. அபாய…

Read More