கொவிட் ஜனாஸா எரிப்பு : பொது மன்னிப்பு கேட்க கூறும் ஹக்கீம் : காரணமறியாமல் கேட்கமுடியாது கெஹெலிய வாக்குவாதம்
(UTV | கொழும்பு) – கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன் பிரகாரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாகவும் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு…