சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டமூலம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இழுவைப்படகுகளுக்கான தடை உள்ளிட்ட விடயங்கள் அடங்கியதாக இந்த சட்டமூலம் அமையப்பெற்றுள்ளதாக, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன. இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த…

Read More

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பின் தலையீட்டை எதிர்ப்பார்த்துள்ள சோமாலியா

(UDHAYAM, COLOMBO) – சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தியதாக இலங்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட கப்பல், சோமாலிய பொசாசோ துறைமுகத்திற்கு சென்ற பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Read More