யாராயினும் அதிகாரத்தினை முறைகேடாக உபயோகிப்பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமைச்சர் சுஜீவ – [VIDEO]

யாராயினும் அதிகாரத்தினை முறைகேடாக உபயோகிப்பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமைச்சர் சுஜீவ.

Read More

மகளை சந்திக்க திஸ்ஸவுக்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அவர் இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கல்வி பயிலும் அவரின் மகளான துல்மினி அத்தநாயக்கவை சந்திக்கவே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரியுள்ளார்.

Read More

விரைவில் ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் ஜே.வி.பி

(UDHAYAM, COLOMBO) – அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தாமதமடைந்து வருகின்றன. இதனை துரிதப்படுத்தும் நோக்கில் தமது கட்சி இந்த சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Read More