சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது
(UTV|KILINOCHCHI)-கடந்த 23 ம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான். குறித்த விபத்து ஏற்ப்பட துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. இதன் பிரகாரம் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில்…