உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்
(UTV|COLOMBO)-டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் டுபாய் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக, காவற்துறை நிதிமோசடி விசாரணை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உதயங்க வீரத்துங்க அமெரிக்காவிற்கு பயணம் செய்து கொண்டிருந்த போது நேற்றைய தினம்…