சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து
(UTV|COLOMBO)-இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சிங்கப்பூர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த உடன்படிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்விக்கிரமசிங்க…