சிரிய ஜனாதிபதி கிழக்கு கௌட்டாவிற்கு விஜயம்
(UTV|SYRIA)-சிரிய ஜனாதிபதி பசார் அல் அஸாட் கிழக்கு கௌட்டா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அரச படையினர் கிழக்கு கௌட்டா பகுதியில் 80 சதவீதமானவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், படையினருக்கு உற்சாகமளிக்கும் நோக்குடன் அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கௌட்டா 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வரும் உக்கிர மோதல் காரணமாக சுமார் ஆயிரத்து 100 பொதுகள் வரையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …