சீரற்ற காலநிலையால் மின் விநியோகத்தை சீர் செய்வதிலும் பாதிப்பு
(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதேவேளை தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல பிரதேசங்களில் மின் கம்பங்கள் விழுந்துள்ளதுடன் ட்ரான்ஸ்போம்பர் என்பனவும் செயலிழந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது. …