சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்
(UTV | கொழும்பு) – கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.