இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

(UDHAYAM, COLOMBO) – இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை  அமுலாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிற நிலையிலேயே மகிந்த இதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுக்கு அமைய காவற்துறையினருக்கு அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. இனவாத செயல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லாமை காரணமாகவே, தமது அணியினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எனவும் மகிந்த…

Read More

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுகிறது. ஆனால் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து தம்மை பலப்படுத்தி வருகிறதே தவிர, மக்கள் நலன் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை. சர்வதேசமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக…

Read More