சட்டம் தன் கடமையை செய்யும்
(UTV|COLOMBO)-போதை குளிசைகளை வைத்திருக்க உதவியளித்த நீதிமன்றத்தில் கடமைபுரியும் நபர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 கோடியே 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7564 போதை குளிசைகளை வைத்திருக்க குறித்த நபர் உதவியளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …