தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

(UDHAYAM, COLOMBO) – மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய நிலையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவராத நிலையில் , நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிக்கக் கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Read More

டிக்கோயா மணிக்கவத்தையில் மண்சரிவு இரண்டு வீடுகள் சேதம் ஏழுபேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா   வனராஜா கிராமசேவாகர் பிரிவிற்குட்பட்ட மனிக்கவத்தை தோட்டத்தில் 03.06.2017 அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் ஏழுபேர் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர் லயன் குடியிருப்பின் பின்புரமுள்ள மண்மேடு சரிந்தே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது சிறுவர்கள் உட்பட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தற்காளிகமாக உறவினர்களின் வீடுகளின் தங்கியுள்ளனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காளிகமாக ஒர் இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளபோது அது தங்குவதற்கு பெருத்தமான இடமில்லையென பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதம்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலிய நானுஓயா கர்னட் தோட்டத்தில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 109 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அவர்கள் வேறு ஒரு தோட்டத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை முதல் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00…

Read More