நானுஓய வரை மாத்திரமே ரயில்கள் சேவைகள்
(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையின் விளைவுகளால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓய வரை மாத்திரமே ரயில்கள் பயணிக்கின்றன. இந்தப் பாதையில் மண்திட்டுக்கள் இடிந்து வீழும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. களனிவெலி ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. தெற்கு கரையோர ரயில் பாதையில் பேருவளை – அளுத்கம நகரங்களுக்கிடையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. [alert…