சைட்டம் மருத்துவ கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்து கல்லூரிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால் முதலீடு செய்ய ஒருவரும் முன்வர மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார் ஏவ்வாறாயினும், நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

Read More

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து,  ஹிக்கடுவை –  சீனிகம ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் இந்த வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம், இன்று நிராகரித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தை கோரியிருந்தனர். கொழும்பு, கறுவாத்தோட்ட பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

சைட்டம் கல்லூரியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி சத்தியாகிரகம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம், கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, இலங்கை அதிபர் தரம் பிரச்சினை தீக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் முன்னணி தீர்மானித்துள்ளது.

Read More

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு

  (UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி உறுதி மொழியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து, அதன் செயலாளர் மருத்துவர் நவிந்த சொய்சா இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல அரச மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More

சைட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வௌியிட்ட கோப் குழு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு நேற்று கூடிய போது, இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். கோப் குழுவானது, நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும், உயர் கல்வி அமைச்சின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும் அழைத்து…

Read More