ஜி7 உச்சிமாநாட்டில் ட்ரம்ப்..
(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரத்தில் அதி உயர் நிலையில் உள்ள 7 நாடுகள் கலந்து கொள்ளும் ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலி நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜேமனி, இத்தாலி, ஜப்பான், பிருத்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த உச்சிமாநாட்டில் ஜி7 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பூகோள காலநிலை தொடர்பான முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….