பிணை முறி விநியோகம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள கணக்காய்வாளர் நாயகம்
(UDHAYAM, COLOMBO) – பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நஷ்டத்திற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம்,சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்திற்கு முன்னர் தேசிய கடன் முகாமைத்துவ குழு ஒன்று…