தொடர்ச்சியான கைது அதிருப்தியளிக்கிறது – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை அதிருப்தியளிப்பதாகவும், அது இலங்கையின் வழக்கமாக மாறிவிட்டதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன்படி தற்போது 53 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமது நாட்டு கடற்றொழிலாளர்களை கைது…

Read More

கச்சத்தீவை மீளப்பெறுவதே பிரச்சினைக்கு தீர்வு – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதன் மூலமே இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஊடாக தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு பழனிச்சாமி, இந்திய பிரதமரை…

Read More

தமிழக கடற்றொழிலாளர்கள் 6 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து இலங்கை கடலோர கண்காணிப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் படகு ஒன்றும் கடற்றொழில் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற கடற்படை நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தாக்கப்படுதல் போன்ற விடயங்களில் இருந்து தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கம், கடற்படையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Read More

தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகித்தில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்கு நியாயம் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டதுடன், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரது இறுதி கிரிகை ஒருவாரத்துக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது….

Read More

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் 85 கடற்றொழிலாளர்கள் தடுப்பில் உள்ளனர். அவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது அதேநேரம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Read More

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

(UDHAYAM, COLOMBO) – தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார். கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின் அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More