தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

(UTV|COLOMBO)-தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிவர முயற்சித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர், தனுஷ்கோடியில் கைதானார். தனுஷ்கோடி காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் தனுஷ்கோடி மாவட்டத்தில் உள்ள ஏதிலிகள் முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]…

Read More

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 13 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 13.76 கிலோ தங்கம் தமிழகத்தின் இரண்டு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன. விசேட புலனாய்வுத் தகவல் அடிப்படையில், குறித்த தங்கம், தமிழக சுங்க புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கும், மதுரைக்கும் இடையே பயணித்த பேருந்து ஒன்றில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 7.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவரிடம் இருந்தே குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாம்பன் – குத்துகல் கடற்கரைப் பகுதியில் வைத்து 6.4 கிலோகிராம்…

Read More

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

(UDHAYAM, COLOMBO) – தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கரூர் – ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 21 வயதான அந்தோனிராஜ் ஜோன்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவற்துறையினரை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More