திருச்சியில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதம்
(UDHAYAM, COLOMBO) – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களை சிறை வளாகத்தில்…