ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு
(UTV|COLOMBO)-ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது. தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ பூட்டான் இந்தியா மியன்மார் நேபாளம் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் பிராந்தியத்தில்…