ஆப்கானிஸ்தானில் ராணுவ கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆம்புலன்சை வெடிக்க செய்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 103 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயம் அடைந்தனர். இக்கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் காபூலில் இன்று தீவிரவாதிகள் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். தலைநகர் காபூலில் மையப்பகுதியில் மார்‌ஷல் யாகிம் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதி. இருந்தும் இன்று…

Read More

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்?

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் தாக்கம் செலுத்தியுள்ள கணினி  மென்பொருள் தாக்கம் இலங்கையின் கணினிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்ரகுப்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது, கடந்த மாதமளவில் இடம்பெற்ற ரென்சம்வெயார் எனப்படும் கம்பம்கோரும் மென்பொருள் தாக்கத்துக்கு சமாந்தரமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மென்பொருள் தாக்கமானது, கணினிக்கு வரும் தகவல்களை பார்க்க முடியாதவாறு செய்துவிட்டு, பின்னர்,…

Read More

வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து இந்த குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான காவற்துறை அதிகாரி ஒருவரே இந்த உலங்குவானூர்தியை கடத்தி தாக்குலை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தாக்குதல்தாரி குறித்த விபரங்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை. இந்த தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Read More

யாழில் மர்ம கும்பலால் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் – ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் 4 உந்துருளிகளில் வந்துள்ள நிலையில், மூன்று பேர், குறித்த நபர் மீது தாக்குதலை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண காவற்துறைக்கு தகவல்…

Read More

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – லண்டனில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. வாகனம் ஒன்று, பயணிகள் மீது ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதால் பலர் காயமடைந்துள்ளனர். லண்டன் பின்ஸ்பெரி பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இது தீவிரவாத தாக்குதலா விபத்தா என்று இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

Read More

குருநாகல் பள்ளிவாசல் மீதான தாக்குதல்! சந்தேக நபர்கள் சிக்கினார்கள்..

(UDHAYAM, COLOMBO) – கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அதிகாலை நேரம் குருநாகல் மல்லவபிடிய முஸ்லீம்  பள்ளிவாசல் மீது தாக்குதல் நடந்திய சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. குருநாகல்  காவற்துறை நிலையத்தின் விசாரணை குழுவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும் பொது பலசேன அமைப்பின் உறுப்பினர்கள் என அறியவந்துள்ளதுடன், மேலும் 4 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவற்துறை மேற்கொண்டுள்ளதுடன்,…

Read More

செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் கல்வி வலயம் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆங்கிளம் பாட ஆசிரியர் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் ஒருவனை கடந்த09.06.2017 தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் பழையமாணவர்களும்  நடத்திய ஆர்பாட்டதை செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களை பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் தாக்கியமை தொடர்பினான விசாரணையை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் அமரேசன் அனுசான் என்ற மாணவன் வழங்கப்பட மேலதிக பாடவேலையை  செய்யவில்லையென. ஆங்கிளம் பாட ஆசிரியர் தாக்கியதாக.          மா ணவனினால்…

Read More

கிளிநொச்சியில் தென்னிலங்கை இளைஞர் குழுவினர்மீது வாளுடன் தாக்குதல் முயற்சி !

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி நகர பகுதியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்பகுதியிலிருந்து உந்துருளிகளில் சுற்றுலா வந்த இளைஞர்குழுவினரின் உந்துருளியின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது . கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த்தாங்கியை பார்வையிடுவதற்காக வருகைதந்த குழுவினர் உந்துருளிகளை வீதியோரமாக நிறுத்திவிட்டு புகைப்படம்  எடுத்துக்கொண்டிருந்த  சமயம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் இருவர்   தாக்குதலை மேற்கொகொள்ள  எத்தனித்த  வேளை  இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர்    வருகைதந்த  இனந்தெரியாத  நபர்கள் அவர்களது  மோட்டர் சைக்கிள்  களை…

Read More

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி ஒன்று இடம்பெற்று நிறைவடைந்தப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இதனைத் தீவிரவாத் தாக்குதலாக கருதுவதாக இங்கிலாந்தின் வடமேற்கு தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும்…

Read More

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்….

Read More