குருணாகலில் ஞானசார தேரரை கைது செய்ய தவறிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு திடீர் பதவி மாற்றம்.
(UDHAYAM, COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய தவறிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு திடீர் பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வை.ஆர்.டப்ள்யூ. விஜேகுணவர்தனவுக்கே இந்த பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. குருணாகல்-தம்புள்ளை வீதியில் வைத்து ஞானசார தேரரை கைது செய்வதற்கு முயற்சி ஒன்று…