70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்
(UTV|COLOMBO)-இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாகவும், பெருமிதத்தோடும் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் சுதந்திர விழா இடம்பெறவுள்ளது. முப்படைகள் மற்றும் பொலிசாரின் பாரம்பரிய இராணுவ அணிவகுப்பிற்கு அப்பால் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் கலாசார நிகழ்ச்சியொன்றும்…