கிண்ணியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
(UDHAYAM, COLOMBO) – கிண்ணியா மற்றும் திருகோணமலையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவானவர்கள் தங்கிச் சிகிச்சைப் பெறுவதால், குறித்த வைத்தியசாலைகளில் தற்காலிக சிகிச்சைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கிண்ணியா பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அங்கு 3 வாரங்களில் 13 பேர் வரையில் டெங்கினால் மரணித்துள்ளனர். டெங்கு அச்சத்தில் 66 பாடசாலைகள் வரையில் அங்கு மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிண்ணியாவில்…