துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது

(UTV|COLOMBO)-ஹோமாகம – பிடிபன வடக்கு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் வசம் இருந்து மூன்று துப்பாக்கிகள், மகசின் மற்றும் ரவைகள் 34ம் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் ஹோமாகம – பிடிபன வீதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவராகும். இவரை இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…

Read More

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – கப்பம் கோரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவற்துறை பாதுகாப்பின் கீழ் கேகாலை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கப்பம் கோரியவரை…

Read More

சிறிகொத்த தலைமையத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட கான்ஸ்டபிலுக்கு அங்கொடயில் சிகிச்சை

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த தலைமையத்தின் இலட்சினை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவற்துறை கான்ஸ்டபில் எதிர்வரும் 29ம் திகதி வரை  மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மிரிஹான காவற்துறையில் பணிபுரியும் 40 வயதுடைய இந்த காவற்துறை கான்ஸ்டபில் கடந்த முதலாம் திகதி இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் பிற்பகல் 5.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார். சந்தேகநபரை அங்கொடை மனநல மருத்துவமனையில்…

Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம்:மேலும் ஒரு சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  (UDHAYAM, COLOMBO) – இன்று காலை களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு சிறை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் நகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறை அதிகாரி மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5…

Read More