சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வருகை
(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர்கள் நேற்றிரிவு கொழும்பை வந்தடைந்தனர். இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர்; வரவேற்றனர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி குழுவினர் கவனம் செலுத்துவர்.