குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கை
(UDHAYAM, COLOMBO) – அரசியல் தேவைக்காக கொழும்பு குப்பை பிரச்சனைக்கு எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வது வருத்ததிற்குரியது என்பதுடன், குப்பை பிரச்சினைக்கு அனைத்து மக்களும் இணைந்து முடிவு எடுக்காவிடின் அனைத்து மக்களும் குப்பைகளை வீடுகளிலேயே வைத்து கொள்ள வேண்டிய நிலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.