தேசிய அணியைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
(UTV|COLOMBO)-இலங்கை தேசிய விளையாட்டு சம்மேளனத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய பயிற்சி குழுக்களில் அங்கம் வகிக்கும் வீர வீராங்கனைகளுக்கு போஷாக்கு கொடுப்பனவு பழங்கப்படவுள்ளது இதுதொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 அளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன்-வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெறும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 விளையாட்டுக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பயிற்சிக் குழுக்களில் 150 வீர வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இந்த நிகழ்வின்…