இலங்கை தேயிலையில் பூச்சி இல்லை
(UTV|COLOMBO)-தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். நேற்று தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து தேயிலை பிரச்சினை குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தேயிலையில் ஒரு வகை பூச்சி தாக்கம் இருப்பதாக ஊடகங்கள் ஊடாக பரவலாக அறிய முடிகின்றது….