தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1148 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 668 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 85 பேர் வேட்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000…

Read More

தேர்தல் முடிவுகளில் பிரமித்து போன ஜனாதிபதி…..

((UTV|COLOMBO)-தெளிவான மாற்றம் ஒன்றை நாட்டில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாகவே அந்த மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். சிறி லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திடம் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த பாடத்தினை கற்றுத்தந்துள்ளதாக…

Read More

தேர்தல் கடமைக்காகச் சென்ற வாகனம் விபத்து

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார். அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் மற்றும் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]…

Read More

தேர்தல் தொடர்பான ஆய்வுகளில் வெளிநாட்டு குழுவினர்

(UTV|COLOMBO)-இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு  குழுவினர் இன்று பல்வேறு மாவட்டங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் நடைமுறைகளை  அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.   விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.   இவர்கள் நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்ததாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக…

Read More

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

(UTV|COLOMBO)-உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். நாடுமுழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேர் நேற்று பல மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியா, மாலைத்தீவு, தென்கொரிய மற்றும் இந்தோநேசியா ஆகிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களே இலங்கை வந்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய அவர்கள் இலங்கை…

Read More

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்.

(UTV|COLOMBO)-சனிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள்  என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார். இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இவர்கள்   நாளை  கடமைகளை தொடங்குவார்கள் என திரு.குணசேகர கூறினார். முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என…

Read More

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

(UTV|COLOMBO)-எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடுமுறையை பெற்றுக் கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறை தொழில்…

Read More

‘தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசி உணர்வுகளை கிளறி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’- அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மானிப்பாயில் இன்று (03) இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, யாழ் மாநகர…

Read More

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை ஆரம்பமானது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள்…

Read More

பிரான்ஸ் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சியே பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸ் பொது தேர்தலின் இறுதி சுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின்  சென்ரிஸ்ட் கட்சியே பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 557 ஆசனங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 445 ஆசனங்கள் இவருக்கும் இவரது ஆதரவு கட்சிகளுக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியால் பிரேரிக்கப்பட்டுள்ள சீர்திருத்த கொள்கைகளை இலகுவாக நிறைவேற்ற முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி…

Read More