டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை?

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை நிலவும் வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை வீழ்ச்சி எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் குறைவடைக்கூடும் என அதன் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் அதுல கருணாரட்ன தெரிவித்திருந்தார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி காரணமாக இரண்டு லட்சத்து எண்ணாயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு லட்சத்து 4 ஆயிரத்து 831…

Read More