நஜீப் ரசாக் இல்லத்தில் இருந்து பல லட்சம் நகைகள் பறிமுதல்
(UTV|MALAYSIA)-பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மாடர்ன் கைப்பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை…