நிவாரண நடவடிக்கைக்கு சதொச விற்பனை நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மத்துகம பிரதேசத்தில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவவேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அகலவத்தையிலுள்ள பதுரெலிய பகுதிக்கு விஜயம் செய்தபோதே இந்த ஆலோசனைகளை வழங்கினார். குறித்த பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரதேசத்திலுள்ள சதொச நிறுவனங்கள் உதவவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்துகமவில் உள்ள சதொச நிறுவனங்கள் உதவ தயாராக இருப்பதாகவும்…

Read More

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…

(UDHAYAM, COLOMBO) – நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே நாளையதினம் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் தாம் இந்த தொழிற்சங்க போராட்டத்தை எதிர்ப்பதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தேசிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக்…

Read More