சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

(UTV | கொழும்பு) – கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிய நபர்!!

(UDHAYAM, COLOMBO) – ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிய நபரொருவர் அங்கிருந்து தன்னை காப்பாற்றுமாறு பற்றுச்சீட்டொன்றை வெளியில் அனுப்பியுள்ள சம்பவம் அமெரிக்கா – டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தினுள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகாக நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கியுள்ளார். அவரது கையடக்க தொலைபேசியையும் மோட்டார் வாகனத்தில் வைத்து சென்றுள்ளதால் தன் சிக்கியுள்ள தகவலை வெளிப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனினும் அந்த இடத்திற்கு பணம் எடுக்க நபரொருவர் வந்துள்ள நிலையில் அந்த நபர் பெற்று…

Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலுமொரு நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் சென்னையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் தலைமன்னார் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி இரவு பிலியந்தல பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக…

Read More

உலகின் மிக வயதான நபர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார். 1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்.

Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம்:மேலும் ஒரு சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

தெரனியாகலை இரட்டைக் கொலை சம்பவம் – சந்தேக நபர் 19 வயதான இளைஞர்

(UDHAYAM, COLOMBO) – தெரனியாகலை மாகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதானசந்தேகத்துக்குரியவர் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதால், அவரைக் கைதுசெய்வதற்காக குறித்த குழுக்கள் நிமிக்கப்பட்டுள்ளன. தெரனியகல பகுதியில் நேற்று இரவு தாய் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவருடைய ஏழு வயது மகள் மற்றும் உறவினர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்த பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் இடம்பெற்றபோது குறித்து…

Read More