பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்!: கையை சுட்டுக்கொண்ட ‘தெரசா மே’
(UDHAYAM, COLOMBO) – பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார். ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே…