பலாங்கொடை நகரை அச்சுறுத்திய நாய் சுட்டுக் கொலை
(UDHAYAM, COLOMBO) – விசர் நோயிக்கு உள்ளான நாய் என சந்தேகிக்கப்படும் நாயொன்று நேற்று 6 பேரை கடித்துள்ளது. பலாங்கொடை நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நாய் கடிக்கு உள்ளானவர்கள் பலங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காவற்துறையினர் குறித்த நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.