ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-பிரிட்டிஷ் பிரதமர் திரேஸா மே அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தனவை  இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமித்துள்ளார். இதற்கமைவாக ரணில் ஜெயவர்தன பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு தூதுவராக செயற்படுவார். இவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் இம்மாதம் 17 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். இக்காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதுடன் பிரட்டன்  மற்றும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக விடயத்திலும் கவனம் செலுத்துவார். ரணில்…

Read More

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து நியமனம்

(UTV|COLOMBO)-புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார். கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்த பிரிகேடியர் சுமித் அதபத்து, இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும்…

Read More

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். தலைவர் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார். இதையடுத்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர். இவர்களில் இந்திய…

Read More

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ரவி சரஷ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட அனில் கும்ப்ளே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேற்றைய தினம் சௌரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கட் ஆலோசனைக்கு குழு நேற்று விண்ணப்பதாரிகளிடம் நேர்காணல் நடத்தியிருந்தது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அதற்கு மேலும்…

Read More

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையிலபதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நிதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

Read More

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல – மத்திய மாகாண சபையில் கணபதி கனகராஜ்

(UDHAYAM, COLOMBO) – தற்போது மத்திய மாகாண  தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 730 பட்டதாரிகளுக்கு  நியமனம் வழங்கிய மத்தியமாகாண கல்வி அமைச்சுக்கும்  முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நேற்று நடைபெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிட தொகுதியில் சபை தலைவர் எல்.டி நிமலசிரி தலைமையில் நடைபெற்றது. அதில் கணபதி கனகராஜ் தொடர்ந்து…

Read More

அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UDHAYAM, COLOMBO) – அஞ்சல் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஆலிம் தெரிவித்துள்ளார். அத்துடன், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆசிரிய நியமனம் , இடமாற்றம் தொடர்பில் புதிய கொள்கை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலநறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கு நிகழ்வு இன்று (22) முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி…

Read More

அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவு முதமலான இயற்கை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்க்கை நிலையை  கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும். அதற்கேற்ப நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பெயர்…

Read More