சுமாத்ரா தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

(UTV | இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகள் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Read More

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|ANDAMAN)-அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம்  கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம்…

Read More

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|TAIWAN)-தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல்…

Read More

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|GREECE)-கிரீஸ் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஏதென்சில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கெண்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் ஏதென்சிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். எனினும் நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்பட்டதாக…

Read More

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

(UTV|JAPAN)-பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. போனின் நகரில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6:30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்…

Read More

ஈரான் தலைநகரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு

(UTV|IRAN)-ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உள்ளூர் நேரப்படி இரவு 8:22 மணிக்கு டெஹ்ரானில் இருந்து மேற்கு திசையில் சுமார் 40 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக…

Read More

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் நேற்று  இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது….

Read More

ஜப்பானில் நிலநடுக்கம்

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானின் தெற்கு கியூஷூ தீவில் இன்று காலை, 5.2 ரிச்சட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கியூஷூ தீவின் கஹோஷீமா நகத்துக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாரியளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Read More