தொடரூந்தில் மோதுண்ட இளைஞரின் நிலை

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி படுகாயமடைந்த ஜெர்மன் நாட்டு இளைஞர், பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவரான இவர், கிதுல்எல்ல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு…

Read More

யாழில் நாய்க் கடிக்குள்ளான மாணவன் ஏற்பட்ட பரிதாப நிலை

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயால் இன்று காலை மரணமடைந்துள்ளார். வழி தவறித் திரிந்த நாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து, குறித்த சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும் கடித்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது. மேலும், அந்த மாணவனின் தாய் மற்றும் சகோதரி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கடித்ததாக கூறப்படும் நாயை…

Read More

காதலனை வீட்டுக்கு அழைத்த காதலி..! காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

(UTV|COLOMBO)-அவிசாவளையில் காதலியின் வீட்டை தேடி மாற்று வழியில் சென்று கொணடிருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காதலன் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு, காயப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்துள்ள காதலன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காதலன் பாதுக்க பிரதேசத்தினை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. காதலன் அவிசாவளையிற்கு வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். இதற்கமைய, இரவு நேரம் காதலி வழங்கிய முகவரிக்கமைய மாற்று வழியில் காதலன் சென்று கொண்டிருந்துள்ள போது,…

Read More

ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை

(UTV|COLOMBO)-தமது தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அசாதாரண காரணங்களால் இந்தியாவின் அண்டைய நாடுகளில் இருந்து ஏதிலிகள் பெருவாரியாக இந்தியாவில் தஞ்சம் கோருகின்றனர். இவ்வாறான ஏதிலிகளை அச்சுறுத்தல் நிறைந்த அவர்களின் சொந்த தேசங்களுக்கு மீண்டும் அனுப்பாதிருக்கும் கொள்கையை இந்தியா இதுவரையில் பின்பற்றி வருகிறது….

Read More

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை இருப்பதாக, ஒக்ஸ்போர்ட் வர்த்தக குழுமம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த மே மாதம் இலங்கைக்கான ஜு.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது. இதன்படி 6000 இலங்கை உற்பத்திகளுக்கான வரிவிதிப்பு நீக்கப்பட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 4பில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது. இதில் இலங்கையின் ஏற்றுமதி 2.6 பில்லியன் யூரோக்களாகும். இந்த ஏற்றுமதியானது…

Read More

நடிகை சரண்யா மோகனின் தற்போதைய நிலை?

(UDHAYAM, COLOMBO) – யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்து புகழ் பெற்றவர் சரண்யா மோகன். இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார், இவருக்கு குழந்தை கூட பிறந்துவிட்டது. அவரே பலமுறை நான் சின்ன பொண்ணு இல்லைங்க என்று ஜாலியாக கூறியுள்ளார், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வைரலாக சுற்றி வருகின்றது. இதில் இவர் மிகவும் வயதானவர் போல் தெரிகிறார், இதைக்கண்ட ரசிகர்கள்…

Read More

அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

(UDHAYAM, COLOMBO) – நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியுள்ள விவாதத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடாத்த சபாநாயகர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார்.

Read More

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தொடரும் சீரற்ற காலயால் மலையகமெங்கும்  பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கடந்த சில வாரங்களுக்கு மேலாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழையும் சீரற்ற கால நிலையால் மலைகத்தில் பலபகுதிகளிலும் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது அந்த வகையில் 04.06.2017 காலை முதல்  அட்டன் நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கொழும்பு  ஹட்டன் நூவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை…

Read More

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

(UDHAYAM, COLOMBO) – யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள கொலரா தொற்று காரணமாகவே இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சானா, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் குறைவடைந்துள்ளது. தற்போதைய நிலையில் அங்கு 2 ஆயிரத்து 752 பேர் கொலரா தெற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 51 பேர் மரணித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More