உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்
(UDHAYAM, COLOMBO) – ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை உடனடியாக பத்தாயிரமாக அதிகரிக்காவிட்டால் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் உதவி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்து கொடுப்பதாக கல்வி அமைச்சு அறிவித்தது. அது புதுவருட சம்பளத்தை வழங்கி முடித்த அடுத்த தினம் இவ் அறிவிப்பு வெளியானது. கல்வி…