காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்
(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சி முறையில் முன்னெக்கும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதி மக்கள் ஆரம்பித்துள்ள நில மீட்பு போராட்டம் இன்று 7 வது நாளாகவும் தொடர்கிறது. 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள் இந்த போராட்டத்தை…