நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|COLOMBO) பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.        

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்…

Read More

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UDHAYAM, COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாக நாளை மறுநாள் 8 மணி நேர நீர் வெட்டு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி , இரவு 9 மணி தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 5 மணி வரை தெஹிவளை , கல்கிஸ்ஸ , ரத்மலான , சொய்சாபுர , அத்திடிய ,…

Read More

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை:மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு எச்சரிக்கை காரணமாக களுத்துறை – புளத்சிங்கள – திப்பொட்டாவ மலை பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர்கள் வெளியேற்றப்பட்டதாக புளத்சிங்கள பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏழு மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை…

Read More

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கடுவெல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர்…

Read More

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

(UDHAYAM, COLOMBO) –     கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் , பாதுக்க பிரதேசம் நீரில்…

Read More

காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சி முறையில் முன்னெக்கும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதி மக்கள் ஆரம்பித்துள்ள நில மீட்பு போராட்டம் இன்று 7 வது நாளாகவும் தொடர்கிறது. 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள் இந்த போராட்டத்தை…

Read More