முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண வீதி அனுமதி பத்திரம் வழங்குதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

Read More

நீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV|COLOMBO)-நீர் வழங்கல் சபை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]    

Read More

பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து இன்று தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக, அனைத்து தொழிற்சங்கங்களும் இன்றைய தினம் இணைந்து, பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக, கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததால், இவ்வாறு பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UDHAYAM, COLOMBO) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 2 வது நாளாகவும் தொடர்கிறது. மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதார அமைச்சில் வைத்து மாணாவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பல மாணவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு…

Read More