சிறந்த தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டும் – ஜனாதிபதி [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – சிறந்த தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று  முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டில் அரச ஊடகங்களை வரலாற்றில் மிக மோசமாகவும் பண்பாடற்ற முறையிலும் பயன்படுத்திய சந்தர்ப்பம், தான் பொது அபேட்சகராக…

Read More

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 3 பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று மதியமே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ————————- மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 38 வயதுடைய நபரொருவரும் 30 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் 14 வயதான சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Read More