அரசாங்கத்தின் 4 முக்கிய பதவிகளில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மன்றாடியார் நாயகம் கப்பில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் இதனிடையே கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.  

Read More

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக தாம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மாகாண சபையில் தாம் சுயாதீனமாக இயங்குவதற்கு எதிர்பார்த்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More