அணித் தலைவர் பதவியில் இருந்து மெத்தீவ்ஸ் விலகல்!!புதிய அணித்தலைவர் இவரா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அணியின் புதிய தலைவர் குறித்து பலராலும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் உப தலைவர் தினேஷ் சந்திமால், புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என…

Read More

கட்டாருக்கான இலங்கை தூதுவர், பதவியில் இருந்து விலக தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி லியனகே தீர்மானித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருக்கான பீக்கொக் மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கு தூதுவர் பதவி தேவையில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஏ.எஸ்.பி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Read More

மஹிந்த அமரவீரவின் அமைச்சு பதவியில் மாற்றமா?

(UDHAYAM, COLOMBO)  – தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் அது ஜனாதிபதியின் விருப்பத்துடன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்ம ஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மஹிந்த அமரவீரவிற்கு நாட்டுக்கு சேவை செய்ய அதிக வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இது தொடர்பில் எமது செய்தி பிரிவு அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படுகிறதா? அது…

Read More